உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / களைக்கொல்லி தெளித்ததால் கருகியது மக்காச்சோள பயிர்

களைக்கொல்லி தெளித்ததால் கருகியது மக்காச்சோள பயிர்

பெரம்பலுார்:பெரம்பலுாரில் களைக்கொல்லி தெளிக்கப்பட்ட 25 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் கருகின. பெரம்பலுார் மாவட்டம், வி.ஆர்.எஸ்.எஸ்., புரத்தை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்த மக்காச்சோள பயிரில், களை அதிகம் இருந்தன. இதையடுத்து, வேலுசாமி, சுப்புராஜ், சுந்தர்ராஜ், ராஜேந்திரன், ராஜா உட்பட ஏழு விவசாயிகள் சேர்ந்து, களையை அழிப்பதற்கு, பெரம்பலுார் மாவட்டம், நெற்குணம் கிராமத்தில் உள்ள ஜி.ஆர்., அக்ரோ சென்டரில், செப்., 6ல், 'வீட் கில்லர்' என்ற களைக்கொல்லி மருந்தை வாங்கி, மக்காச்சோள வயல்களில் தெளித்தனர். செப்., 19ல், வயலில் களைச்செடிகளுடன் மக்காச்சோள பயிர்களும் சேர்ந்து கருகியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். வே ளாண்மை துறை அதிகாரிகள், மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டு, மாதிரியை ஆய்வுக்கு அனுப்பினர். ஏக்கருக்கு, 25,000 ரூபாய் வரை செலவு செய்திருப்பதாகவும், களைக்கொல்லி மருந்தால் மக்காச்சோளம் பயிர்கள் கருகியதற்கு காரணமான மருந்து நிறுவனம், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விவசாயிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை