உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / பெரம்பலூர் கலெக்டர் இடமாற்றம்: பொது மக்கள் அதிருப்தி

பெரம்பலூர் கலெக்டர் இடமாற்றம்: பொது மக்கள் அதிருப்தி

பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.பெரம்பலூர் கலெக்டராக கற்பகம் கடந்த 2023ம் ஆண்டு பிப்., மாதம் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போது முதல் ஏழைகள் நலனில் அக்கறை செலுத்தினார். முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவது, அரசின் நலத்திட்டங்களை அமல்படுத்துவதில் ஆகியவற்றில் தீவிரமாக செயல்பட்டதுடன், பொது மக்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். சாமானிய மக்களும் அவரை எளிதில் சந்தித்து தங்களது பிரச்னைகளை தெரிவித்து தீர்வு கண்டனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்களை தூர்வாருதல், வாய்க்கால்களை சீரமைப்பு பணிகளிலும் ஆர்வம் காட்டினார். நேற்று அவரை இடமாற்றம் செய்த தமிழக அரசு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கற்பகம் ஓய்வு பெற இன்னும் 1.5 ஆண்டுகள் உள்ள நிலையில், அவரை இடமாற்றம் செய்ததற்கு அப்பகுதி மக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் அவர்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றியதால், அதில் பாதிக்கப்பட்ட சிலர் அளித்த புகார் காரணமாக கற்பகம் மாற்றப்பட்டு இருக்கலாம் என குற்றம்சாட்டி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை