உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / மக்களை நோக்கி வருவாய்த்துறை சிறப்பு முகாம் : பெரம்பலூரில் செப்.,5ல் துவக்கம்

மக்களை நோக்கி வருவாய்த்துறை சிறப்பு முகாம் : பெரம்பலூரில் செப்.,5ல் துவக்கம்

பெரம்பலூர்: 'மக்களை நோக்கி வருவாய்த்துறை என்ற சிறப்பு முகாம் மூன்றாம் கட்டமாக வரும் 5ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது' என பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: மூன்றாம் கட்ட முகாம் வரும் 5ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடக்கிறது. அதன்படி 5ம் தேதி குன்னம் தாலுகா செட்டிக்குளம் பிர்கா வரகுபாடி, காரை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், கொளக்காநத்தம் பிர்கா தொண்டப்பாடி, மேலமாத்தூர் ஆகிய கிராமத்திலும், 6ம் தேதி குன்னம் தாலுகா செட்டிக்குளம், மாவிலங்கை, அழகிரிபாளையம், ஆதனூர் (வடக்கு) கிராமத்திலும் நடக்கிறது.செப்., 7ம் தேதி சிறுவயலூர், நக்கசேலம் ஆதனூர் (தெற்கு), கொட்டரை ஆகிய கிராமத்திலும், 8ம் தேதி எலந்தலப்பட்டி, து.களத்தூர், சாத்தனூர், சிறுகன்பூர் ஆகிய கிராமத்திலும், 9ம் தேதி புதுஅம்மாபாளையம், கண்ணப்பாடி, சிறுகன்பூர், அயினாபுரம் ஆகிய கிராமத்திலும் நடக்கிறது. செப்., 12ம் தேதி தேனூர், இரூர், கொளக்கநாத்தம், கூடலூர் ஆகிய கிராமத்திலும், 13ம் தேதி பாடாலூர் கொளத்தூர் கிராமத்திலும், 14ம் தேதி தெரணி, கூத்தூர், புஜங்கராயநல்லூர், கிராமத்திலும், 15ம் தேதி நொச்சிக்குளம், திம்மூர் ஆகிய கிராமத்திலும், 16ம் தேதி சில்லக்குடி (வடக்கு), சில்லக்குடி (தெற்கு) ஜெமீன்ஆத்தூர் ஆகிய குறுவட்ட பகுதிகளில் மக்களை நோக்கி வருவாய்த்துறை சிறப்பு முகாம் நடக்கும்.முகாமில், மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட உள்ளது. 5ம் தேதி வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரம் பிர்கா தொண்டபாடி, நெய்க்குப்பை கிராமத்திலும், அனுக்கூர், பிரம்மதேசம் கிராமங்களில் 6ம் தேதியும், மேட்டுப்பாளையம் (தெற்கு) மேட்டுப்பாளையம் (வடக்கு) கிராமங்களில் 7ம் தேதியும், பிம்பலூர், வி.களத்தூர் கிராமங்களில் 8ம் தேதியும், பேரையூர், எறையூர் கிராமங்களில் 9ம் தேதியும், தேவையூர் (வடக்கு) தேவையூர் (தெற்கு) கிராமங்களில் 10ம் தேதியும், வாலிகண்டபுரம் கிராமத்தில் 12ம் தேதியும் நடக்கும்.முகாமில் புது ரேஷன் கார்டு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவை, விவசாயக்கூலி, ஆதரவற்ற விதவை, முதிர்கன்னி ஆகியோர்களுக்கான உதவித்தொகைகள், கண்பார்வையின்மை, செவிடு, மனவளர்ச்சி குன்றியோர், கை கால் குறைபாடு ஆகியோருக்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் நிலப்பட்டா போன்றவை குறித்து தெரிவிக்கலாம்.முகாம் நடைபெறும் நாளில் காலையில் மனுக்களை பெறும் கிராமங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், மாலையில் மனுக்களை பெறும் கிராமங்களில் மாலை 2 மணி முதல் 5 மணி வரையிலும் அந்தந்த வி.ஏ.ஓ., அலுவலகத்தில் வழங்கலாம்.கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்படும் நாள் அன்று அதற்குரிய தீர்வுகளையும், நலத்திட்ட உதவிகளையும் அந்தந்த ஆர்.ஐ., அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். இம்முகாம் டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ., சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ஆகியோர் தலைமையில் நடக்கும். முகாமை அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளனர்கள். இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி