உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெரம்பலூர் / பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மனைவி ராஜேஸ்வரி (40). இவருக்கு திருமணமாகி 22 ஆண்டாகிறது. ஆனால், இதுவரை குழந்தை இல்லை என தெரிகிறது. குழந்தை இல்லாததால் மனவேதனையடைந்த ராஜேஸ்வரி நேற்றுமுன்தினம் மாலை 5 மணியளவில் அரளி விதையை அரைத்து குடித்தார்.ராஜேஸ்வரியின் உறவினர்கள் இவரை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து ராமசாமி கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் இன்ஸ்பெக்டர் தங்கராசு வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.* பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளதுரை மனைவி சித்தாங்கி (35). இவருக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. வெள்ளதுரை விவசாய கூலி வேலைக்கு சென்று அதில் வருமானத்தில் தினமும் குடித்துவிட்டு சித்தாங்கியுடன் குடும்பத்தகராறில் ஈடுபடுவது வழக்கம். இதனால் மனமுடைந்த சித்தாங்கி குண்டுமணி எனும் விஷ விதையை அரைத்துக்குடித்தார். இவரது உறவினர்கள் சித்தாங்கியை அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி கே.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று இறந்தார். சித்தாங்கி அம்மா ஜீவானந்தம் கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ