மேலும் செய்திகள்
பெரம்பலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
20-Sep-2025
குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
16-Sep-2025
8 மாத குழந்தையுடன் தாய் தீக்குளித்து தற்கொலை
15-Sep-2025
பெரம்பலூர்: 'பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை போலீஸ் இணைய தளத்தில் பதிவு செய்யலாம்' என பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி., ரூபேஸ்குமார்மீனா தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் தங்களுடைய புகார் மனுக்கள் மற்றும் தகவல்களை தமிழ்நாடு போலீஸ் இணைய தளத்தில் பதிவு செய்வது, ஏற்கனவே நடைமுறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் தங்களது புகார் மனுக்கள், தகவல்களை பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.,யிடம் தெரிவிக்க டபுள்யூ, டபுள்யூ, டபுள்யூ டாட் டிஎன்போலீஸ் டாட் ஜிஓவி டாட் இன் எனும் இணையத்தில் பதிவு செய்யலாம். திருட்டு தொடர்பான புகார் அல்லது முதல் தகவல் அறிக்கையில், பதிவு செய்ய வேண்டிய புகார்களை சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் அளித்து பதிவு செய்ய வேண்டும். இந்த இணைய தளத்தை பயன்படுத்தி காணாமல் போனவர்கள், அடையாளம் தெரியாமல் இறந்தவர்கள் மற்றும் போலீஸ் துறை தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
20-Sep-2025
16-Sep-2025
15-Sep-2025