மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டரிடம் நேற்று ஒரே நாளில் 280 பெண்கள் மனு கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் வாடகை வீடுகளில் குடியிருந்துவரும் ஏழை, எளிய மக்கள் இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட கலெக்டரிடம் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். தகுதியின் அடிப்படையில் இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைகள் மற்றும் வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. இருந்தும் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி வரும் மனுக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. வழக்கம்போல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுநடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புதுக்கோட்டை டவுன் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் 280 பேர் தங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கக் கோரி மாவட்ட கலெக்டர் மகேஸ்வரியிடம் மனு கொடுத்தனர். இவைதவிர முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ரேஷன்கார்டு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 502 பேர் மனு கொடுத்தனர். இவற்றை நடவடிக்கைக்காக தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகளிடம் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தின்போது எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 12 மாணவர்களுக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கல்வி உதவித்தொகையை கலெக்டர் மகேஸ்வரி வழங்கினார்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025