மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை: அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று (15ம் தேதி) அம்மனுக்கு பூச்சொரிதல் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோவில்களில் ஒன்று அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் கோவில். இங்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா வரும் 26ம் தேதி ஆரம்பமாகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி முடிய விழா தொடர்ந்து 20 நாட்கள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 3,4 ஆகிய இருதேதிகளில் திருத்தேரோட்டம் நடக்கிறது. ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு இன்று இரவு பூச்சொரிதல் நடக்கிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர், மண்டகபடிதாரர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025