மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 200 விசைப்படகுகளில், 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.இதில், இந்திய கடல் பகுதியில் விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஓரு படகு மற்றும் அதிலிருந்த 23 முதல் 50 வயதுடைய நான்கு மீனவர்களையும், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்ற இரண்டு படகுகளையும், அதிலிருந்த 19 முதல் 68 வயதுடைய ஒன்பது மீனவர்களையும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர்.தொடர்ந்து, கைது செய்துள்ள மீனவர்களையும், விசைப்படகையும், விடுவிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025