உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் மாணவர்கள் 15 பேர் காயம்

பள்ளி வாகனம் கவிழ்ந்ததில் மாணவர்கள் 15 பேர் காயம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே புதுநகரில் தனியார் பள்ளி இயங்குகிறது. இந்த பள்ளிக்கு நாள்தோறும் மாணவர்கள் வேனில் சென்று வருகின்றனர். நேற்று காலை மோளுடையான்பட்டி, கருப்பட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு வேன் சென்று கொண்டிருந்தது. தொண்டைமான் ஊரணி அருகே உள்ள சாலையில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகில் வையாபுரி குளத்தில் கவிழ்ந்தது. குளத்துக்கரையில் கட்டப்பட்டிருந்த சிமென்ட் தடுப்புக்கட்டையில் மோதி சாய்ந்து நின்றது.வேனில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த நிலையில், 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர். தகவலறிந்த பெற்றோர், சம்பவ இடத்திற்கு வந்து, மாணவர்களை மீட்டு, அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இது குறித்து தனியார் பள்ளி முதல்வர் வெண்ணிலா கூறியதாவது:புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து கழகம் நடத்திய ஆய்விற்கு இந்த வாகனமும் உட்படுத்தப்பட்டது; அனுமதி பெற்று தான் இயக்கப்படுகிறது. அந்த சாலை குறுகியதாகவும், நேற்று முன்தினம் பெய்த மழையால் சாலை இருபுறமும் ஈரமாக இருந்ததால், வளைவில் பள்ளி வாகனத்தை திருப்பிய போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டது. இனிவரும் காலங்களில் இது போன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்