உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / போதையில் ஓட்டிய லாரி மோதியதில் 2 பெண் பலி

போதையில் ஓட்டிய லாரி மோதியதில் 2 பெண் பலி

மீமிசல்:புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே அரசங்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு, பாண்டிச்சேரியில் இருந்து, ராமநாதபுரத்திற்கு அரிசி லோடு ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருவாரூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், 53, என்பவர் ஓட்டினார். அரசங்கரை சோதனை சாவடி பகுதியில் லாரி வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் ஓரமாக இருந்த தடுப்புகளை உடைத்தது. பஸ்சிற்காக காத்திருந்த அப்பகுதியை சேர்ந்த குஞ்சம்மா, 55, காளீஸ்வரி, 46, என இரு பெண்கள் மீதும் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் லாரியை மடக்கி பிடித்து, லாரியின் டிரைவரை திருப்புனவாசல் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் லாரி டிரைவர் ராஜேந்திரன் மது போதையில் லாரியை ஓட்டிவந்தது தெரிந்தது. திருப்புனவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்