மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை : புதுக்கோட்டையிலிருந்து அன்னவாசல், இலுப்பூர் வழியாக மணப்பாறை நோக்கி, நேற்று மதியம் தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் அன்னவாசல் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி, திடீரென சாலையில் கவிழ்ந்தது. இதில், பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.அப்போது, அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக பஸ்சின் முன், பின் பக்கம் கண்ணாடிகளை உடைத்து, பயணியரை மீட்டு இலுப்பூர், அன்னவாசல் மற்றும் மணப்பாறை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பினர்.அதேபோல், புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசலில் இருந்து அறந்தாங்கி நோக்கி, தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. தீயத்துார் பகுதியில் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, அந்த தனியார் பஸ்சை திருப்பிய போது, எதிர்பாராத விதமாக, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அதில் பயணித்த 40-க்கும் மேற்பட்ட பயணியர் உயிர் தப்பினர். எனினும், காயமடைந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025