உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது

புதுக்கோட்டை மீனவர்கள் 5 பேர் கைது

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டணத்தைச் சேர்ந்த ரமேஷ், 46, என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ், 35, முரளி, 32, செல்வம், 40, வெள்ளையன், 40 மற்றும் மல்லிப்பட்டணத்தை சேர்ந்த விசுவநாதன், 35, ஆகியோர் இந்திய எல்லையில், 32 நாட்டிகல் தொலைவில் கடலில் நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, விசைப்படகுடன், ஐந்து மீனவர்களையும் கைது செய்து, இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி