உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / சட்டத்துறை அமைச்சர் திறந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு

சட்டத்துறை அமைச்சர் திறந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அமரடக்கியில் கடந்த 3 நாட்களுக்கு முன், தி.மு.க.,வின் உட்கட்சி பூசலால் அப்பகுதியில், இரண்டு பிரிவுகளாக இரு வேறு இடங்களில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த இரண்டு தண்ணீர் பந்தல் திறப்பு விழாவில, தி.மு.க., கட்சி நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, காலையில் திறக்க வேண்டிய நிகழ்ச்சி மதியம், 3:00 மணிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனித்தனியாக, இரண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.தொடர்ந்து, தி.மு.க., மாவட்ட குழு உறுப்பினர் ராமநாதன் என்பவருடைய கடைக்கு முன், திறக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையால் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு நேற்று அதிகாலையில் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து, ஆவுடையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ