உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கருக்காக்குறிச்சியில் சாராயம் போலீசார் தேடுதல் வேட்டை

கருக்காக்குறிச்சியில் சாராயம் போலீசார் தேடுதல் வேட்டை

புதுக்கோட்டை:கள்ளக்குறிச்சியில் விஷ சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்பை தொடர்ந்து, தமிழகம் முழுதும் கள்ளச்சாராய சோதனைகளை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே கருக்காக்குறிச்சி கிராமத்தில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, அங்கு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மாவட்ட ஏ.டி.எஸ்.பி., சுப்பையா தலைமையில் தனிப்படை போலீசார் கருக்காக்குறிச்சி கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் காட்டு பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ