உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஆறுகளில் மணல் கடத்தல் அலட்சியத்தில் அதிகாரிகள்

ஆறுகளில் மணல் கடத்தல் அலட்சியத்தில் அதிகாரிகள்

புதுக்கோட்டை:'விராலிமலை அருகே ஆறுகளில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே ராஜகிரி, கத்தலுார், ஆத்துப்பட்டி, பூமரத்துப்பட்டி, வில்லாரோடை, மதயானைப்பட்டி, கலிமங்கலம் ஆகிய ஊர்களையொட்டி செல்லும் கோரையாறு மற்றும் காட்டாறுகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஜே.சி.பி., இயந்திரத்தால், மணல் அள்ளி டிராக்டர், டிப்பர் லாரிகளில் கடத்திச் செல்வதாகவும், இதுகுறித்து, வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.தொடர்ந்து, காட்டாற்றில் ஜே.சி.பி., இயந்திரத்தால் மணல் அள்ளி டிராக்டரில் கடத்திச் செல்வதை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் மாத்துார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். துறையினர், சம்பவ இடத்திற்கு வரவில்லை.இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள், அங்கு திரண்டு வந்து, மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தினர். அப்போது, அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் டிராக்டரை எடுத்துக் கொண்டு, மணல் கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.மணல் கடத்தலை வருவாய் துறையினர் மற்றும் போலீசார் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகள் மற்றும் விராலிமலை அருகே கோறையாறு, காட்டாறுகளில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க, தமிழக அரசுக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி