மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில், மதுபானங்களை வாங்கிச் செல்லும் 'குடி'மகன்கள் சாலையில் அமர்ந்து குடித்து வருகின்றனர். அந்த சாலை வழியாக, 10 கிராம மக்கள் தினந்தோறும் சென்று வரும் நிலையில், சாலையில் அதிகளவு பள்ளி மாணவ, மாணவியர் வேலைக்கு செல்லும் பெண்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து, கலெக்டர் மெர்சிரம்யா-விடம் பள்ளி மாணவியர் புகார் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:பெருங்களூரில் உள்ள டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவ - மாணவியர் பெரிதும் பாதிக்கப்படுகிறோம். சில நேரங்களில் அவ்வழியாக செல்லும் பெண்களை 'குடி'மகன்கள் மிரட்டும் சம்பவமும் நடக்கிறது. இந்த கடையை மூடக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தோம். எந்த விதமான பயனும் இல்லாததால், கலெக்டரை சந்தித்து, மனு அளிக்க வந்தோம்.இவ்வாறு மாணவியர் கூறினர். பின், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025