உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / சாலை அகலப்படுத்த வெட்டப்படும் மரங்களால் பொதுமக்கள் அதிருப்தி

சாலை அகலப்படுத்த வெட்டப்படும் மரங்களால் பொதுமக்கள் அதிருப்தி

புதுக்கோட்டை:புதுக்கோட்டை கோட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கீரனுார், புதுக்கோட்டை மற்றும் திருமயம் என்று 6 உட்கோட்டங்கள் உள்ளன. அந்த உட்கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், முதன்மை நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் என்று மொத்தம் 296 கி.மீ., நீளம் கொண்டவை. இந்த சாலையோரங்களில் வேம்பு, நாவல், வேங்கை, வாகை, புங்கை என்று நாட்டு மரக்கன்றுகள் 20,000 வரை நடவு செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது, புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த பணியின்போது நெடுஞ்சாலைத்துறையினர் சாலையோரம் இருந்த பல மரங்கள் அடியோடு வெட்டப்பட்டன. இதனல் நிழலுக்கு கூட ஒதுங்க முடியவில்லை என்று வாகன ஓட்டுனர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மரங்களை வெட்டி சாய்க்கும் நெடுஞ்சாலைத்துறையினர், மீண்டும் சாலையோரம் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ