உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / அரசு காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமி மீட்பு

அரசு காப்பகத்தில் இருந்து தப்பியோடிய சிறுமி மீட்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை நரிமேடு அரசு காப்பகத்தில் இருந்து தப்பியோடிய மூன்று சிறுமிகளில் இருவர் ஏற்கனவே, மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு சிறுமியும் சென்னையில் மீட்கப்பட்டார்.புதுக்கோட்டை நரிமேட்டிலுள்ள அன்னை சத்யா நினைவு அரசு காப்பகத்தில் இருந்து குற்ற வழக்கில் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டு சேர்க்கப்பட்டிருந்த, 17 வயதுடைய மூன்று சிறுமிகள் கடந்த மாதம் தப்பியோடினர்.இச்சம்பவம் தொடர்பாக, காப்பக சூப்பரின்டெண்ட் பரமேஸ்வரி திருக்கோகர்ணம் போலீசில் அளித்த புகாரின்படி, தப்பியோடிய சிறுமிகளை மீட்க தனிப்படை அமைத்து, திருக்கோகர்ணம் போலீசார் தேடி வந்தனர். தொடர்ந்து, தப்பியோடிய மூன்று சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் கடந்த வாரம் திருச்சி மற்றும் மதுரையில் மீட்கப்பட்டு, மீண்டும் காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். மேலும், மற்றொரு சிறுமியையும் நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து போலீசார் மீட்டு வந்து, மீண்டும் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.அரசு காப்பகத்தில் இருந்து தப்பியோடிய காரணம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ