மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் 129 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் அருகே பார் நடத்துவதற்கு, 90 கடைகளுக்கு மேல் அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது.ஆனால், அனைத்து டாஸ்மாக் கடை பார்கள், 24 மணிநேர கடைகளாக மாறி செயல்பட்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் உள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமீறல் கடைகள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள, அரசியல் தலையீடு காரணமாக போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணிக்கு திறந்து இரவு 10 மணிக்கு மூடப்படுகின்றன.ஆனால், கடைகள் திறக்கும் போது இல்லாத விற்பனை, கடைகளை மூடிய பின்னர் அமோகமாக கள்ளத்தனமாக நடந்து வருகிறது. அப்போது, விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.இதை, பல பகுதிகளில் போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர். எனவே, கள்ள சந்தையில் களைகட்டும் மது விற்பனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025