உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி

புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி

புதுக்கோட்டை:

புதுகை அருகே புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி

அரிமளம் அருகே ஓணாங்குடியில் வறட்சி காரணமாக நீர் தேடி வந்த புள்ளி மான் ஒன்று வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே ஒணாங்குடி இருந்த பழமையான காப்பு காடுகள் அழிக்கப்பட்டு தைல மரங்களை பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளதால், விலங்குகளின் வாழ்வாதாரமும், அருகில் இருக்கும் நிர்நிலைகளின் அழிவும் ஏற்பட்டு வருகிறது.அதன்படி, காடுகளில் உள்ள மான், முயல், குரங்கு, போன்ற விலங்குகளுக்கு போதிய உணவு, குடிநீர் கிடைக்காமல் நகரங்களுக்கும், சாலைகளுக்கும் வருகின்றன.அவ்வாறு, நேற்று ஓணாங்குடி பகுதியில் சாலையை கடக்க முயன்ற 4 வயதுடைய புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை வனத்துறையினர் புள்ளிமானின் உடலை பரிசோதனைக்கு உட்படுத்தி பின்னர் புதைத்தனர். தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள காடுகளில் கடும் வறட்சி நிலவுவதால் குடிநீருக்காக மான்கள் மற்றும் இதர வனவிலங்குகள் குடியிருப்புக்குள் வர துவங்கியுள்ளன.இதனால், வாகனத்தில்அடிபட்டு, சமூக விரோதிகளால் வேட்டையாடப்பட்டு, நாய்கள் கடித்து என மான்கள் அவ்வபோது இறந்து வருவதாகவும், தைலமரக்காடுகளால், வனப்பகுதியில் உணவு, குடிநீர் கிடைக்காமல் விலங்குகள் அழிந்து வருவதாக மக்கள் தெரிவித்தனர்.

புதுகை அருகே புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டு பலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

அப்புசாமி
ஜூலை 06, 2024 23:05

போங்க..மான் பிரியாணி சாப்புடுங்க...


S. Gopalakrishnan
ஜூலை 06, 2024 12:35

தைல மரம், சீமைக் கருவேல மரம் ஆகியவை இந்திய சீதோஷ்ண நிலைக்கு ஒவ்வாதவை. இவற்றை ஏன் நாம் வளர்க்க வேண்டும் ?


மேலும் செய்திகள்