உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கு அமலாக்கத்துறை மனு தள்ளுபடி

புதுக்கோட்டை:'புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து வழக்கில் தங்களுக்கு ஆவணங்களை வழங்க வேண்டும்' என, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, விஜயபாஸ்கர் மீதான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்கள் வழங்கக்கோரி, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீது விசாரணை நடைபெற்று வந்தது.நீதிபதி சுபத்ராதேவி முன்னிலையில் நேற்று நடந்த விசாரணையின் போது, விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய மனைவி வரவில்லை; அவர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடினர்.பின், அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி உத்தரவிட்டார். ஆவணங்களின் நகல்களை மட்டும் பார்க்க அனுமதி கோரினால், அதற்கு புதிய மனுவை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.இதையடுத்து, வழக்கின் விசாரணையை 28ம் தேதிக்கு அவர் தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை