உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / வேங்கைவயல் வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை:வேங்கைவயல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மூன்று பேருக்கும் நீதிமன்றம் மூலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை நகலை வழங்கிய நிலையில், வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததில் குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ள வேங்கைவயலை சேர்ந்த போலீஸ்காரர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகிய மூன்று பேரும் இரண்டாவது நாளாக நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகினர்.இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல் தங்களுக்கு வேண்டும் என நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் மூவரும் கேட்டிருந்த நிலையில், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மூலம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை சம்பந்தப்பட்ட மூவருக்கும் நேற்று வழங்கினர்.வழக்கு விசாரணையை, வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை