உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மயானம் செல்ல சாலை வசதி கேட்டு பெண்கள் நுாதன போராட்டம்

மயானம் செல்ல சாலை வசதி கேட்டு பெண்கள் நுாதன போராட்டம்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே காரக்கோட்டை, சிங்கவனம், வாடிவாசல், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இப்பகுதியில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். தனியாருக்கு சொந்தமான நிலம் வழியாக மயானத்திற்கு சென்று வந்த நிலையில், அந்த இடத்தை வேறு ஒருவர் விலைக்கு வாங்கி, வேலி போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர். எனினும், அதிகாரிகள் உறுதியால் போராட்டங்களை கைவிட்டனர். ஆனால், நேற்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து நேற்று, 50-க்கும் மேற்பட்ட பெண்கள், நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் மயான கரையில் பானையில் சமைத்து, அங்கேயே தங்க போவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த அதிகாரிகள், வழக்கம் போல, 15- நாட்களில் சமாதான கூட்டம் நடத்தி, உரிய முடிவு எடுப்பதாக உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது; அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ