மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
கறம்பக்குடி:புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அவ்வப்போது ரோட்டில் நடந்து செல்வோரையும், பைக்கில் செல்வோரையும் துரத்தி கடிக்க முயற்சிக்கின்றன. இதனால், பெண்கள், சிறுவர்கள் சாலையில் நடந்து செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று நகரில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, அவ்வழியாக சென்றவர்களை துரத்தி கடித்தது. 30 - 55 வயதுடைய 19 பேரை கடித்ததில், அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. காயம்பட்டவர்கள், கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.பின், மேல் சிகிச்சைக்காக, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிலர் தடுப்பூசிகள் செலுத்தியபின் வீடு திரும்பினர்.ஒரே நேரத்தில், ஒரே ஊரில், 19 பேரை ஒரு வெறிநாய் கடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025