பட்டாக்கத்திகளுடன் இருதரப்பு வாக்குவாதம்
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், கோபாலபட்டினம் கிராமத்தில், 5,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கின்றனர். அங்குள்ள மசூதியில் நேற்று முன்தினம் தொழுகை முடிந்ததும், வெளியே வந்த இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த இருவர், பட்டாக்கத்தியை கையில் வைத்துக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மீமிசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார், பட்டாக்கத்தி வைத்திருந்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்து, எச்சரித்து அனுப்பினர். மக்களை அச்சுறுத்தும் விதமாக பட்டாக்கத்தியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் விட்டுவிட்டதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.