உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஆணைய இயக்குநர், கலெக்டர் வடகாடு கிராமத்தில் விசாரணை

ஆணைய இயக்குநர், கலெக்டர் வடகாடு கிராமத்தில் விசாரணை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில், மே 5ம் தேதி ஏற்பட்ட இருதரப்பு மோதலில், இரு தரப்பையும் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.பாதிப்புக்குள்ளான ஒரு தரப்பான பட்டியலின மக்களை தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய இயக்குநர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் மருத்துவமனையில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்தனர்.மேலும், வடகாட்டில் பாதிப்புக்குள்ளான வீடுகளையும், தீ வைத்து எரிக்கப்பட்ட வீடுகளையும் அந்த குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின்னர், பிரச்னைக்குரிய அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் நிலம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற குழுவினர், அந்த இடம் குறித்த விபரங்களை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, புதுக்கோட்டை எஸ்.பி., அபிஷேக்குப்தாவிடம் கேட்டறிந்தனர்.ரவிவர்மன் கூறுகையில், ''வடகாடு பிரச்னை தொடர்பாக, விசாரணை அறிக்கை தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கப்படும்,'' என்றார்.ஐகோர்ட் கண்டிப்பை தொடர்ந்து, புதுக்கோட்டை கலெக்டர் அருணா, வடகாடு கிராமத்திற்கு நேற்று சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !