உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / விராலிமலையில் ஆக்கிரமிப்பு அகற்ற பக்தர்கள் கோரிக்கை

விராலிமலையில் ஆக்கிரமிப்பு அகற்ற பக்தர்கள் கோரிக்கை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் சுப்பிரமணியசுவாமி மலைக்கோவில் உள்ளது. மலையை சுற்றிலும் கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்த நிலையில், காலப்போக்கில் அவற்றில் சில நிலங்கள் தனி நபர்கள் ஆக்கிரமிப்பு நிலங்களாக மாறி விட்டன. இந்நிலையில், கோவிலுக்கு பின், மலைப்பாதை அருகே, பட்டா நிலம் என கூறி, தனி நபர்கள் சிலர் இடத்தை சுத்தம் செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறையினர், விராலிமலை போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோவிலை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்த, தமிழக அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி