உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு

புதுகையில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று(7ம் தேதி) நடைபெறவுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 சிறப்புத் தேர்வில் கலந்துகொண்டு 197 பேர் தேர்வு எழுத உள்ளனர். அரசுத்துறை அலுவலகங்களில் தகுதியின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கான குரூப்-4 சிறப்புத் தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடக்கிறது. இதற்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 197 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வினை சிறப்பாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை