மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தே.மு.தி.க., குற்றஞ்சாட்டியுள்ளது. புதுக்கோட்டையில் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ஜாஹீர் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் செந்தில்குமார், ஞானம், பொருளாளர் கதிரவன், மகளிரணி செயலாளர் விஜயா, இளைஞர் அணி செயலாளர் சுரேஷ், மாணவரணி செயலாளர் தர்மசீலன், நகரச் செயலாளர் சிங்கமுத்து உட்பட பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சிமன்ற பதவிகளுக்கு போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றிபெறச் செய்யும் விதமாக தேர்தல் பணிகளில் பொறுப்புடன் செயல்படவேண்டும். ஒவ்வொரு வார்டுகளிலும் ஓட்டு போட தகுதியுடையவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்யவேண்டும். உள்ளாட்சி தேர்தலுக்கு முன் புதுக்கோட்டை நகராட்சி பகுதிக்குள் சிதிலமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் செப்பனிடுவதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் துவக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் குறிப்பாக, ஆலங்குடி, அரிமளம் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு மிக மோசமாக உள்ளது. இரவு நேரங்களில் டாக்டர்கள் மட்டுமின்றி நர்சுகளும் பணியில் இருப்பதில்லை. அரசு மருத்துவமனை டாக்டர்கள் பெரும்பாலும் அவர்களுடைய சொந்த கிளினிக்குகளில் தான் நேரத்தை செலவிடுகின்றனர். இதன்காரணமாக கிராமப்பகுதிகளைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலை மாறி அரசு மருத்துவமனைகள் முறையாக இயங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பொன்னமராவதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளின் நலன் கருதி அப்பகுதியின் நெல் கொள்முதல் நிலையம் திறக்கவேண்டும் உட்பட கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025