மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
பழுதடைந்த போர்வெல் குழாய் மாலை அணிவித்து அஞ்சலி
11-Sep-2025
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ள நிலையில் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்துள்ளவர்கள் அங்கீகார கடிதத்தை எதிர்பார்த்து கடந்த மூன்று நாட்களாக கட்சி அலுவலகங்கள் முன் தவம்கிடந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இருகட்டமாக நடத்தப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் 22ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய 29ம் தேதி கடைசி நாள் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் சூடுபிடித்துள்ளது. முதல் நாளான 22ம் தேதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட விரும்பி 13 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் நகராட்சி கவுன்சிலர், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ளவர்கள் அவரவர் கட்சியின் அங்கீகார கடிதத்தை எதிர்பார்த்து கடந்த மூன்று நாட்களாக கட்சி அலுவலகங்கள் முன் தவம் கிடந்து வருகின்றனர். இதன்காரணமாக புதுக்கோட்டையில் உள்ள அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., கட்சி அலுவலகங்கள் முன் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கூட்டம் நிரம்பிவழிவதை காணமுடிகிறது. பெரும்பாலும் 25ம் தேதிக்குள் அங்கீகார கடிதம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட கட்சி அங்கீகாரம் வழங்காவிட்டாலும் தனிப்பட்ட செல்வாக்கை வைத்து சுயேச்சையாக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளிலும் கட்சி நிர்வாகிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தமட்டில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் 22, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் 225, கிராமப் பஞ்சாயத்து தலைவர் 497, பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் மூவாயிரத்து 807, நகராட்சி தலைவர் 2, வார்டு கவுன்சிலர் 69, டவுன் பஞ்சாயத்து தலைவர் 8, வார்டு கவுன்சிலர் 120 உட்பட நான்காயிரத்து 750 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025
11-Sep-2025