உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மாணவர் விடுதிக்கு 23 சென்ட் நிலம் அத்தாணி பஞ்., தலைவர் தாராளம்

மாணவர் விடுதிக்கு 23 சென்ட் நிலம் அத்தாணி பஞ்., தலைவர் தாராளம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கான விடுதி கட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு பலலட்ச ரூபாய் பெறுமதியான 23 சென்ட் நிலத்தை அத்தாணி பஞ்., தலைவர் பரமசிவம் தானமாக வழங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த அத்தாணி கிராமத்தில் போதிய வசதியின்றி வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அத்தாணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் வலியுறுத்தி வந்தனர். போதிய இடம் இல்லாததால் பெற்றோர்களின் கோரிக்கைக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செவிமடுக்கவில்லை. மேலும் போதிய இடம் ஒதுக்கீடு செய்து ஒப்படைத்தால் மாணவர் விடுதி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அத்தாணி அரசு மேல்நிøல்பள்ளி அருகில் உள்ள பலலட்ச ரூபாய் மதிப்பிலான 23 சென்ட் நிலத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு கிராம மக்கள் சார்பில் தானமாக வழங்க அத்தாணி பஞ்சாயத்து தலைவர் பரமசிவம் முன்வந்தார். இதையடுத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசந்திரன் முன்னிலையில் அறந்தாங்கி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு நடந்தது. பின்னர் இதற்கான பத்திரத்தை பஞ்சாயத்து தலைவர் பரமசிவம் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரியிடம் ஒப்படைத்துள்ளார். பத்திரத்தை பெற்றுக்கொண்ட கலெக்டர், 'அத்தாணியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பள்ளி மாணவர் விடுதிக்கான புதிய கட்டிடம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ