உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / புதுகை கலெக்டர் பெயரில் போலி வாட்ஸாப் கணக்கு

புதுகை கலெக்டர் பெயரில் போலி வாட்ஸாப் கணக்கு

புதுக்கோட்டை,: புதுக்கோட்டை கலெக்டர் அருணா போட்டோவை வைத்து, போலி 'வாட்ஸாப்' கணக்கு உருவாக்கி, டி.பி.,யில் கலெக்டரின் போட்டோவை வைத்து அவர் அனுப்புவது போல பலவிதமான தகவல்கள் சிலர் அனுப்பி உள்ளனர்.அதில், 'என் நண்பர் சந்தோஷ்குமார் சி.ஆர்.பி.எப்., கேம்பில் பணியாற்றி வருகிறார். உங்கள் எண்ணை அவருக்கு, 'பார்வேர்டு' செய்துள்ளேன். அவர், வீட்டில் உள்ள பழைய பர்னிச்சர் பொருட்களை விற்பதாக உள்ளார். மிகவும் மலிவாக அந்த பொருட்கள் கிடைக்கின்றன. அதை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்' என்பது போன்ற தகவல்கள், சமூக வலைதளத்தில் பல நபர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.இதை, கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். யார் இந்த போலி கணக்கு உருவாக்கினர் என்பதை கண்டறிந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சைபர் கிரைம் போலீசில் மாவட்ட நிர்வாகம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை