உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் தொண்டி மீனவர் கைது

ஜெலட்டின் குச்சிகள் கடத்தல் தொண்டி மீனவர் கைது

திருவாடானை: புதுக்கோட்டை மாவட்டம் மலைப்பகுதியிலிருந்து தொண்டி பகுதிக்கு ஜெலட்டின் கடத்தி வருவது வழக்கமாக உள்ளது. ஆக.,28 இரவு புதுக்கோட்டையில் இருந்து டூவீலரில் இருவர் ஒரு சாக்கு மூடையில் ஜெலட்டின், டெட்டனேட்டர் மற்றும் ஒயரை கடத்தி ஓரியூரை நோக்கி சென்றனர். வேகத்தடையில் டூவீலர் ஏறி, இறங்கும் போது மூடை தவறி விழுந்து ஜெலட்டின் குச்சிகள் ரோட்டில் சிதறியது. அப்போது ரோந்து சென்ற போலீசாரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். எஸ்.பி.பட்டினம் போலீசார் 400 ஜெலட்டின், 400 டெட்டனேட்டர், 2 கிலோ ஒயரை பறிமுதல் செய்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க திருவாடானை டி.எஸ்.பி. சீனிவாசன் உத்தரவில் இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன், எஸ்.ஐ. சுல்த்தான் இப்ராஹிம் தலைமையில் 5பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தேடுதல் வேட்டையில் கோவையில் பதுங்கி இருந்த தொண்டி புதுக்குடியை சேர்ந்த செந்தில்குமார் 35, கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை