உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கனமழை: சூறாவளியால் கரும்புபயிர்கள் சேதம்

கனமழை: சூறாவளியால் கரும்புபயிர்கள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே முதுகுளம் உட்பட இதர பகுதியில் 500 ஏக்கருக்கும் மேல் 12 மாதம் பயிரான கரும்பு பயிரிடப்பட்டிருந்தது. தற்போது, 8 மாதம் வளர்ந்த பயிர் ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் செலவு செய்திருந்தனர்.இந்நிலையில், நேற்று இரவு இப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால், நன்றாக வளர்ந்து வந்த கரும்பு பயிர்கள் அடியோடு சாய்ந்து. அறுவடைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் சாய்ந்த இந்த கரும்பை எதுவும் செய்ய முடியாது என்றும், முதலுக்கே மோசமாகி விட்டதாக விவசாயிகள் வேதனை அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !