உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / பிரசாத பங்கீட்டில் மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து

பிரசாத பங்கீட்டில் மோதல் ஒருவருக்கு கத்திக்குத்து

புதுக்கோட்டை:கறம்பக்குடியில் கோவில் திருவிழாவில் பிரசாதம் பங்கீடு செய்வதில், மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் உள்ள முத்துக்கருப்பையா கோவில் திருவிழா எட்டு நாட்களாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கரைகாரர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்வு இரவு நேரத்தில் நடந்தது.நேற்று இரவு பிரசாதம் பங்கீடு செய்யும் போது, ஒரே கரையை சேர்ந்த இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், அம்மங்குடியை சேர்ந்த ராமகிருஷ்ணன், 26, என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும், இருதரப்பு மோதலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது.தகவலறிந்து வந்த கறம்பக்குடி போலீசார், சிறிய தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். படுகாயமடைந்த ராமகிருஷ்ணன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து, கறம்பக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை