உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / சும்மா இருந்த பஞ்., தலைவர் அதிகாரம் பறிப்பு

சும்மா இருந்த பஞ்., தலைவர் அதிகாரம் பறிப்பு

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி தலைவராக இருப்பவர் சீதாலட்சுமி, 45. இவர், ஊராட்சி பணிகளில் கவனம் செலுத்தாமல், சும்மாவே இருந்துள்ளார். மேலும், இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தராமல் இருந்ததாக கூறி, இவர் மீது நடவடிக்கை எடுக்க, அரசுக்கு புகார்கள் சென்றன. புகார்கள் மீது, ஊராட்சிகள் சட்டப்படி, அந்த பஞ்., தலைவரிடம் விளக்கம் கோரப்பட்டது. அவர் அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை. அதையடுத்து, ஊராட்சிக் கணக்கில், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறித்து, மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ