வேங்கைவயல் மூதாட்டிக்கு அஞ்சலி செலுத்த அனுமதி
புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இதில், அதே கிராமத்தைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஈடுபட்டதாகக் கூறப்பட்டுள்ளது.சில மாதங்களாக கிராமத்திற்குள் வெளியூரில் இருந்து ஆட்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில், முரளிராஜா பாட்டி கருப்பாயி, 85, வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் இறந்தார். இறப்புக்காக, வெளியூர் ஆட்கள் கிராமத்திற்குள் நேற்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி சார்பில் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னதுரை தலைமையில் அக்கட்சியினர் மூதாட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல, பல்வேறு அமைப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.