உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / திருடர்களிடம் தொடர்பு: காவலர் சஸ்பெண்ட்

திருடர்களிடம் தொடர்பு: காவலர் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை:திருப்புனவாசல் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த காவலர் ஒருவர், திருடர்களிடம் தொடர்பில் இருந்ததாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.புதுக்கோட்டை மாவட்டம், திருப்புனவாசல் போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்த கார்த்திகேயன், 40, என்பவர் சிவகங்கை மாவட்டம், பகுதியில் மாடு திருடும் கும்பல் மற்றும் ரவுடிகளிடம் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து புகார்கள் வந்ததன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி., அபிஷேக்குப்தா, திருப்புனவாசல் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த காவலர் கார்த்திகேயனை நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி