| ADDED : ஆக 01, 2011 01:33 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடந்த இலவச மருத்துவமுகாமில், உதடு மற்றும்
அன்னப்பிளவு ஏற்பட்டுள்ள 23 பேர் இலவச சிகிச்சை அளிக்க தேர்வு
செய்யப்பட்டடனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிருபா மருத்துவ
தொழில்நுட்பக்கல்லூரி மற்றும் சேலம் விநாயகா மிஷன் மருத்துவமனை சார்பில்,
புதுக்கோட்டை எஸ்.எஸ்., மருத்துவமனையில், உதடு மற்றும் அன்னப்பிளவு இலவச
சிகிச்சை முகாம் நடந்தது.கிருபா மருத்துவ தொழில்நுட்பக்கல்லூரி மு தல்வர்
செல்வின் தாமஸ் தலைமை வகித்தார். டாக்டர் தர்ஷிணி முகாமை துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறப்பகு திகளிலிருந்து ஏராளமானோர்
பங்கேற்றனர். சே லம் விநாயகா மிஷன் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்
பிரபாகரன், நோயாளிகளை பரிசோதித்தார். 23 பேரை அறுவை சிகிச்சைக்காக
தேர்ந்தெடுத்தார். இவர்களுக்கு உணவு, தங்குமிடத்துடன் அறுவை சிகிச்சை
செய்யப்படுகிறது.