உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / கட்டையால் அடித்து ஒருவர் கொலைபுதுகை அருகே தந்தை-மகன் எஸ்கேப்

கட்டையால் அடித்து ஒருவர் கொலைபுதுகை அருகே தந்தை-மகன் எஸ்கேப்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஒருவரைக் கட்டையால் அடித்து கொலை செய்த தந்தை மற்றும் மகனை போலீஸார் தேடிவருகின்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த திருமணஞ்சேரியைச் சேர்ந்தவர் ஜெயராஜ்(54). இவருக்கும் இதே பகுதியைச் சேர்ந்த உறவினர் செல்லத்துரை(60) என்பவருக்கும் நிலத்தகராறு உள்ளது. இதன்காரணமாக இருவரும் அடிக்கடி வார்த்தை மோதலில் ஈடுபடுவது வழக்கம்.நேற்றுமுன்தினமும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த செல்லத்துரை மற்றும் இவரது மகன் ஆறுமுகம் ஆகியோர் ஜெயராஜின் வீட்டுக்குச் சென்று அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர்.இவர்களை ஜெயராஜின் மனைவி சரோஜா, மகன் முருகானந்த் ஆகியோர் கண்டித்துள்ளனர். இருவரையும் மகன் ஆறுமுகத்துடன் சேர்ந்து செல்லத்துரை கட்டையால் அடிக்க முயன்றுள்ளார். இவர்கள் சத்தம்போடவே வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த ஜெயராஜ் ஓடிவந்து இருவரையும் கண்டித்துள்ளார்.இதில், ஆத்திரமடைந்த செல்லத்துரை மற்றும் ஆறுமுகம் கட்டையால் ஜெயராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த ஜெயராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கறம்பக்குடி போலீஸார், ஜெயராஜை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான செல்லத்துரை மற்றும் இவரது மகன் ஆறுமுகம் ஆகியோரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை