மேலும் செய்திகள்
ஆத்மநாத சுவாமி கோவில் கல்வெட்டு கண்டெடுப்பு
28-Sep-2025
மீன் வளம் பெருக்கும் செயற்கை பவளப்பாறை
22-Sep-2025
கடலில் மிதந்த கஞ்சா பண்டல்கள் பறிமுதல்
12-Sep-2025
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரும் 17ம் தேதிக்குள் அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவையை தொடர்புகொள்ளலாம்.இதுகுறித்து அப்பேரவையின் நிறுவனர் தினகரன் வெளியிட்ட அறிக்கை:புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை சார்பில் ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா அக்டோபர் 2ம் தேதி புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடக்கிறது. விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இப் போட்டி புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வரும் 17ம் தேதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகிறது.பேச்சுப் போட்டி 6 முதல் 8வது வகுப்பு வரை 'நான் போற்றும் காந்தி' என்ற தலைப்பிலும், 9 முதல் ப்ளஸ் 2 வரை 'வீரமங்கை வேலு நாச்சியார்' என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு 'இன்றைய உலகில் காந்தியின் தாக்கம்' என்ற தலைப்பிலும் நடக்கிறது.கட்டுரைப் போட்டி 9 முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை 'காந்திய வழியில் என் கனவு இந்தியா' என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு '2020ல் காந்திதேசம்-ஒரு பார்வை' என்ற தலைப்பிலும் நடக்கிறது.கவிதை, பாட்டு மற்றும் ஓவியப் போட்டிகள் அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் பொதுவானது. தேசியப் பாடல்கள், சுதந்திர போராட்ட காட்சிகள் குறித்ததாக இருக்கவேண்டும்.போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் பள்ளி அல்லது கல்லூரி முதல்வர்களிடமிருந்து அனுமதி கடிதம் பெற்று வரவேண்டும்.
28-Sep-2025
22-Sep-2025
12-Sep-2025