மேலும் செய்திகள்
அ.தி.மு.க., மாவட்ட நிர்வாகி விபத்தில் பலி
02-Dec-2025
தாலுகா ஆபீஸ் முன் ஆடுடன் பெண் போராட்டம்
27-Nov-2025
புதுக்கோட்டை : புதுக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வீர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத், 30, என்ற இளைஞர் கையில் அரிவாளுடன் கோவில் கருவறைக்குள் அமர்ந்து சாமி வந்தது போன்று கூச்சலிட்டபடியே இருந்துள்ளார். இதைக்கண்ட கோவில் ஊழியர்கள், பக்தர்கள் அலறியடித்து வெளியே ஓடினர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சமரச பேச்சு நடத்தியும், வினோத் வெளியே வரவில்லை. மேலும், கருவறைக்குள் நுழைபவர்களை அரிவாளால் வெட்டுவதற்கும் முற்பட்டார்.சுதாரித்த தீயணைப்புத்துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து, வினோத்தை மடக்கி பிடித்தனர். பின், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
02-Dec-2025
27-Nov-2025