உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / மாமியாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகன்

மாமியாரை கட்டையால் அடித்து கொன்ற மருமகன்

புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே ஆண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாட்சி, 66. இவரது மகள் அலமேலு, 43. இவர், தர்மபுரி மாவட்டம், அய்யனார்புரத்தை சேர்ந்த சத்தியகுமார், 48 என்பவரை 16 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டார்.குடும்ப பிரச்சனையால், 10 ஆண்டுகளுக்கு முன் அலமேலு, சத்தியகுமாரை பிரிந்து, மீனாட்சியுடன் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார்.சத்தியகுமார், -அலமேலு தம்பதிக்கு 16, 14 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தாய் வீட்டில் உள்ள அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவ்வப்போது சத்தியகுமார் மது போதையில் தகராறு செய்து வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணி அளவில் சத்தியகுமாருக்கும், அலமேலுவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. சத்தியகுமார் மனைவியை கட்டையால் தாக்க முயன்ற போது, மீனாட்சி தடுத்துள்ளார். இருவரையும், சத்யகுமார் சரமாரியாக கட்டையால் தாக்கியதில், மீனாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தியகுமார் திருமயம் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை