உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுக்கோட்டை / வேங்கைவயல் வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்

வேங்கைவயல் வழக்கு விசாரணை அதிகாரி மாற்றம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளனுார் அருகே வேங்கைவயல் விவகாரத்தில் ஓராண்டிற்கு மேலாக உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல், சி.பி.சி.ஐ.டி., போலீசார் திணறி வருகின்றனர்.சி.பி.சி.ஐ.டி., போலீசார், 31 பேரிடம் டி.என்.ஏ., ரத்த மாதிரி பரிசோதனை எடுத்தும் குற்றவாளிகளை கண்டறிய முடியவில்லை.இந்நிலையில், உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்காததை கண்டித்து, தேர்தல் புறக்கணிப்பு செய்ய போவதாக இறையூர் மற்றும் வேங்கைவயல் பகுதியில் பொதுமக்கள் பேனர்களை வைத்தனர்.நேற்று காலை இந்த பேனர் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெள்ளனுார் போலீசார் பேனரை அகற்றி, அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்தி வருகின்றனர்.இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., கல்பனா தத்தை நியமனம் செய்து, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில், மேலும் 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த, புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஜெயந்தி நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ