உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கிடப்பில் ராமேஸ்வரம் கார் பார்க்கிங் திட்டம் : துரித நடவடிக்கை தேவை

கிடப்பில் ராமேஸ்வரம் கார் பார்க்கிங் திட்டம் : துரித நடவடிக்கை தேவை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோயில் நிர்வாகத்தினால் அமைக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் வளாகத்தில் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேஸ்வரத்திற்கு நாள் தோறும் வரும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் ராமநாதசுவாமி கோயிலை சுற்றியும் மற்றும் நகரின் முக்கிய வீதிகளிலும் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகிறது. இங்குள்ள தங்கும் விடுதிகளில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் லாட்ஜ்களில் தங்கிக்கொண்டு வாகனங்களை ரோட்டில் நிறுத்துகின்றனர்.

இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. ராமேஸ்வரம் நகராட்சி மூலம் அக்னிதீர்த்த கடற்கரை பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமநாதசுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 12 ஏக்கர் பசுப்பட்டி தோப்பில் சுற்றுலா துறை நிதி மற்றும் கோயில் நிதி சேர்ந்து ரூ.50 லட்சம் மதிப்பில் இரண்டு ஏக்கரில் சிமென்ட் கான்கிரீட் தளம் அமைத்து, பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியில் மட்டுமே காம்பவுன்ட் சுவர் கட்டப்பட்டு, விளக்கு, குடிநீர், நிழற்குடை, கழிப்பறை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆடி திருக்கல்யாண திருவிழா விரைவில் நடைபெறவுள்ள நிலையில் ஆடி அமாவாசைக்கு அதிகளவில் பக்தர்களின் வாகனங்கள் வரும் என்பதால் அதற்குள் மீதமுள்ள பகுதிக்கு சுற்றுச்சுவர் அமைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை