உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

கீழக்கரை : தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் திருப்புல்லாணியில் நடந்தது. தலைவர் ராதா தலைமையில் நடந்தது. மாவட்ட முன்னாள் தலைவர் மங்களநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் வன்னிமுத்து வரவேற்றார்.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு பணப்பயன் மற்றும் உயர் கல்வி,பதவி உயர்வு நிலுவை தொகை பயன்கள் ஆகியவைகளை 15 நாளில் முடிக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை தலைவர்கள் யுவானி சேவியர்,முன்னாள் மாவட்ட துணை தலைவர் கஜேந்திரன், வட்டார துணை தலைவர்கள் கிங்மோசஸ்,சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் உதயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ