உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மொபைல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் "டிஸ்மிஸ் : முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

மொபைல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் "டிஸ்மிஸ் : முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை

ராமநாதபுரம் : ''மாணவர்கள் பள்ளியில் மொபைல்போன் பயன்படுத்தினால், 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்,'' என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ராமேஸ்வரம் ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. முகாமை துவக்கி வைத்து முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பள்ளிகளில் மாணவர்களின் மொபைல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் தடுத்து நிறுத்த வேண்டும். அவர்கள் அனுமதிக்கும் பட்சத்தில் தான் தவறுகள் நடக்கிறது. இதனால் படிப்பு பாழாகும் அபாயம் உள்ளது. மொபைல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கப்படுவர். இதுகுறித்து அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும். அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் திடீர் சோதனை நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ