உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் விளையாட்டு விழா

முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரியில் விளையாட்டு விழா

கீழக்கரை, : -கீழக்கரை முகமது சதக் இன்ஜினியரிங் கல்லுாரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா நடந்தது.முகமது சதக் அறக்கட்டளை இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா தலைமை வகித்தார். முதல்வர் நிர்மல் கண்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். துணை முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். ராமநாதபுரம் கூடுதல் எஸ்.பி., காந்தி, குற்றாலம் பார்டர் ரஹ்மத் குரூப் ஓட்டல் உரிமையாளர் முகமது ஹசன் இஸ்மாயில், யாஷிகா ஆனந்த் பங்கேற்றனர்.விளையாட்டுப் போட்டியில் முதலிடம் மற்றும் இரண்டாமிடம் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டது. அண்ணா பல்கலை தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார், பி.ஆர்.ஓ., நஜிமுதீன் ஆகியோர் செய்தனர். திட்டமிடல் அலுவலர் திராவிட செல்வி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை