மேலும் செய்திகள்
வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
24-Aug-2024
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரில் காரில் கடத்திய 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த கடலோர பாதுகாப்பு போலீசார் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.வாலிநோக்கம் கடலோர பாதுகாப்பு போலீசார் சாயல்குடியில் இருந்து துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்றனர். காரை நரிப்பையூரில் நிறுத்திவிட்டு கடத்திய இருவர் தப்பி சென்றனர். கடலோர பாதுகாப்பு குழும போலீசார் காரில் 35 மூட்டைகளில் இருந்த 1400 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பிச் சென்ற இருவரை போலீசார் தேடுகின்றனர்.
24-Aug-2024