| ADDED : ஜூன் 14, 2024 10:28 PM
ராமநாதபுரம் : ஒரு நாளைக்கு இந்தியாவில் 1.5 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படும் நிலையில் மிகவும் குறைவாகவே ரத்த தானம் மூலம் கிடைக்கிறது.மக்களிடையே ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கியில் நடந்த விழாவில் தெரிவித்தனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரத்த வங்கி, தாய் பாசம் அறக்கட்டளை, மஹாராஜா ஜவுளி நிறுவனம் இணைந்து ரத்த தான தின விழா நடத்தினர்.டீன் செந்தில்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன் குமார், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பிரீஷா உட்பட பலர் பங்கேற்றனர். இந்த ஆண்டு ரத்த தானம் செய்தவர்களுக்கு நன்றி கூறும் தினமாக ரத்ததான தினம் கொண்டாடப்பட்டது. இதில் பேசியவர்கள் கூறியதாவது:140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் விபத்துக்கள் அதிகளவில் நடக்கின்றன. அறுவை சிகிச்சைகள் அதிகளவில் நடக்கின்றன.ஒரு நாளில் 1.5 கோடி யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானமாக கிடைப்பது குறைவாகவே உள்ளது. இதனால் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.மக்களிடையே ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருவர் ரத்த தானம் செய்தால் மூன்று உயிர்களை காப்பாற்றலாம் என தெரிவித்தனர். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் அர்ஜூன்குமார், டாக்டர் மிதிலேஷ்குமார் ஆகியோர் ரத்த தானம் வழங்கினர்.ஏற்பாடுகளை தாய்ப்பாசம் அறக்கட்டளை நிறுவனர் பாதுஷா செய்திருந்தார்.